திங்கள், 23 மார்ச், 2015

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்

வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்
Post by ராஜா

சில நேரங்களில் நம்முடைய USB பென் டிரைவ் அல்லது மெமரி கார்டை நண்பர்களின் கணினியில் பயன்படுத்தி விட்டு பிறகு நம்முடைய கணினிக்கு கொண்டு வந்து இணைத்தோமானால் அதில் இருந்த files & folders அனைத்தும் மறைந்து அதற்கு பதில் அவற்றின் பெயரிலேயே shortcuts உருவாகியிருக்கும். இது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சினை.
Win32 atraps pz என்னும் டிரோஜன் வகை வைரஸ் தான் இதற்கு காரணம். இந்த shortcut டினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் ஆர்வகோளாறில் நாம் இவற்றை திறக்க முயற்சித்தோமானால் அப்போ தான் இவர் தான் வேலையை காட்டுவார். அதாவது இதை நீங்கள் double click செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கணினியின் virus scanner , Firewall இவற்றை செயலிழக்க வைத்து உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பிறர் எளிதில் அணுகும் வண்ணம் கதவை திறந்துவிடும்.
நேற்று (சைட்டில் புன்னகை ) அலுவலக நண்பரின் கணினியில் பயன்படுத்தியபிறகு எனது pendrive இதனால் பாதிப்புக்குள்ளானது , இதற்கு முன்னரும் பல முறை இந்த பிரச்சினையை சந்தித்துள்ளேன் இதை பற்றி எனக்கு ஏற்கனவே தெரிந்தபடியால் அப்போவெல்லாம் manual ஆக நானே நீக்கிவிட்டு பயன்படுத்தி வந்தேன்.
இதற்கு எளிமையாக tools எதுவும் இணையத்தில் உள்ளதா என்று தேடிபார்க்கும் போது அருமையான ஒரு சிறிய மென்பொருள் இதற்கென உள்ளது கண்டேன்.
நமது உறுப்பினர்களுக்கு பயனளிக்குமே என்று இங்கு பதிகிறேன்.
http://liquidtelecom.dl.sourceforge.net/project/hfv/HFV.exe
இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த சிறிய மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இதை திறக்கும் போது உங்களிடம் ஒரு பாஸ்வோர்ட் கேட்கும் ஏதாவது ஒரு பாஸ்வார்டை கொடுத்து உள்நுழையவும்.அடுத்து கீழ்க்கண்ட விண்டோ திறக்கும் .
இதில் step 1: என்னுமிடத்தில் Browse என்பதை அழுத்தி உங்களின் மெமரி கார்ட் அல்லது பென் டிரைவ் select செய்யவும்.
அடுத்து Step 2: என்னுமிடத்தில் உள்ள Delete Virus என்பதை அமுக்கவும் ,அவ்வளவு தான் ஓரிரு நிமிடங்களில் உங்களின் pendrive அல்லது memarycard வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டு உங்கள் கோப்புகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
சிறந்த இந்த மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்துள்ள மென்பொருள் நண்பர்களுக்கு நன்றி
http://www.eegarai.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக