செவ்வாய், 31 மார்ச், 2015

திருவிளக்கு வழிபாடும் பூஜா விபரமும் !!

திருவிளக்கு வழிபாடும் பூஜா விபரமும் !!



தினம் வீட்டில் காலையும் மாலையும் தீபம் ஏற்றி வணங்கி வர திருமகள் நிலையாக வீட்டில் தங்கிவிடுவாள். இந்த தீபத்தை எப்படி வழிபடுவது, எந்த வகை திரி, எண்ணெய், எந்த உலோகத்தினால் செய்த விளக்கு உபயோகப்படுத்துவது என நடுத்தர குடும்பத்து இல்லதரசிகள் குழம்புகின்றனர். அவர்களுக்காகவே பெரியோர்கள் வழி வகுத்து சொன்ன தகவல்களை இங்கு தெரியப்படுத்துகின்றோம்.

திருவிளக்கின் வகைகள் : மண்ணால் செய்த விளக்கு, வெண்கலத்தால் செய்த விளக்கு, பஞ்சலோகத்தால் செய்த விளக்கு, வெள்ளிவிளக்கு, இவ்விளக்குகளில் தீபம் ஏற்றலாம். எவர்சில்வர் விளக்கு சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் ஏற்றலாம். இந்த உலோக விளக்குகளில் காமாட்சி அம்மன் திருவுருவம் அல்லது அஷ;டலட்சுமிகள் திருவுருவம் பொறிக்கப்பட்டு இருப்பின் உத்தமம். குத்துவிளக்கிலும் தீபம் ஏற்றலாம்.
எண்ணெய் வகைகள் :
நெய் : நெய் தீபம் ஏற்றுவது மகாலட்சுமிக்கு ப்ரிதி செல்வம் சேரும்.
எள் எண்ணெய் : தரித்திரத்தை போக்கும் மரண சனி பொங்கு சனியாக மாறி வளம் தருவார்.
தேங்காய் எண்ணெய் : கேது பகவானுக்கு ப்ரிதி, கேது தோஷம், கேது தசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றி வரலாம்.
விளக்கெண்ணெய் : (கொட்டமுத்து) அம்மனுக்கு உகந்தது தைரியத்துடன், செல்வமும் சேரும், உறவுகள் பலபடும், புகழ் உண்டாகும்.
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
கடலை எண்ணெய்யை ஒரு போதும் தீபத்திற்கு உபயோகப்படுத்த கூடாது.
திரிவகைகள்
பஞ்சு திரி : சுத்தமான பஞ்சினை பன்னீரில் நனைத்து நிழலில் உலர்த்தி போடலாம் அல்லது அப்படியே போடலாம்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.
சிவப்பு நூல் திரி : வீட்டில் சதாபிரச்சனை உள்ளவர்கள், திருமணம் தடை உள்ளவர்கள் இந்த திரியை உபயோகப்படுத்தலாம்.
மஞ்சல் நூல் திரி : அம்மன் அருள் கிடைக்க இந்திரியை உபயோகப்படுத்தலாம்.
வெள்ளை வஸ்திர திரி : வெள்ளை வஸ்திரத்தை பன்னீரில் நனைத்து திரியாக திரித்து போடலாம். தெய்வ குற்றத்தை போக்கும்.
வெள்ளை எருக்கன் திரி : வீட்டில் துஷ;ட ஆவிகள் இருப்பினும், அடிக்கடி சாமிவந்து ஆடுபவர்கள் இந்த திரியினால் தீபம் ஏற்றி வர மங்களம் உண்டாகும்.
தாமரை தண்டு திரி : மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முகம்
ஒரு முகம் தீபம் ஏற்ற : ஒரு முகம் தீபம் ஏற்ற மனசஞ்சலம் நீங்கும் வசியம், புகழ் ஏற்படும்.
இருமுகம் தீபம் ஏற்ற : குடும்ப ஒற்றுமை ஏற்படும், வாக்கு வன்மை ஏற்படும்.
மூன்றுமுகம் தீபம் ஏற்ற : ஊழ்வினை தோஷம் போக்கும், புத்திரர்களால் மேன்மை கிடைக்கும்.
நான்குமுகம் தீபம் ஏற்ற : வீடு, வாகனம் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்தியடையும்.
ஐந்துமுகம் தீபம் ஏற்ற : அனைத்து செல்வங்களும் கிடைக்கும், புத்;திர சோகம் நீங்கும்.
தீபத்தை ஏற்றும் திசை : தெற்குத் திசை தவிர்த்து மற்ற அனைத்து திசைகளிலும் தீப முகம் இருக்கலாம்.
தீபத்தை வைக்கும் இடம் : தீபத்தை தரையில் வைக்ககூடாது. ஒரு பித்தளை தட்டு (அ) காப்பர் தட்டு (அ) பஞ்சலோக தட்டை எடுத்துக் கொண்டு அதில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள், கிழங்கு வைத்து அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கினை வைக்கவும். அல்லது மஞ்சள் நீரில் விளக்கினை வைக்கலாம். குத்து விளக்கை ஒரு சிறிய வாழை இலை வைத்து அதில் அரிசி வைத்து அதன் மேல் வைக்க வேண்டும்.

குத்துவிளக்குக்கு மட்டும் அடிப்பாகம், தண்டுபாகம், எண்ணெய் பாகம், திரிமுனைகள் முகம், விளக்கின் மேல் நுனி இவற்றில் மஞ்சள் வைக்கவும். ஏனெனில் குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்மனையும், தண்டுபாகம் திருமாலையும், எண்ணெய் பாகம் ருத்திரனையும், முகங்கள் ஈஸ்வரனையும், மேல் நுனி பிரம்மத்தையும் குறிக்கும்.
https://suzhimunai.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக