திங்கள், 30 மார்ச், 2015

கண்களில் கரு வளையம்:

கண்களில் கரு வளையம்:

நம்மில் பெரும்பாலானோருக்கு கணகளைச் சுற்றி கருவளையம் உண்டாகிறது. இது அவர்களின் அழகைக் குறைத்து விடுகிறது. பெண்கள் இதற்காக பெரிதும் கவாலிப்படுவார்கள். இதற்காக டாக்டர்களைப் பார்த்து அலையவேண்டியதில்லை. இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள், தயிரும் மஞ்சள் தூளும் போதும் எங்கின்றனர்.

* தயிர் கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தைக் கலந்து பசை போலாக்கி, தினமும் கண்களின் கீழ் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால், ஓரிரு மாதங்களில், கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* கருவளையத்திற்கு உருளைக் கிழங்கின் சாறும் நலல் பலன் தரும். உருளைக் கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல, முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி தோல் பளிச்சிடும்.

* கற்றாழை ஜெல்லும் கருவளையத்தைப் போக்கும். கற்றாழை-ஜெல்லால், கண்களைச் சுற்றியுள்ள தசைகளை மெதுவாக, ‘மஸாஜ்’ செய்துவிடுங்கள். வட்ட வடிவில் மஸாஜ் செய்யவேண்டும்.

* குளிப்பதற்குமுன், சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களைச் சுற்றி மெதுவாக மஸாஜ் செய்தால், கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால், கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.

* கண்களின் சோர்வு நீங்க, மற்றொரு நல்ல இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்

* நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தழும்பு ஏற்பட்டுவிட்டால், துளசி இலைகளை தேங்காய்ப் பால் சேர்த்து அரைத்து தடவினால், தழும்பு மாறிவிடும்.

* சர்க்கரை ஆரோக்கியத்துக்கு எதிரானது. ஆனால் சருமத்திற்கு ஏற்றது. சருமத்தைப் பராமரிப்பதற்கு சர்க்கரை மிகவும் உதவுகிறது. சர்கக்ரையைத் தண்ணீரில் கரைத்து , 5 நிமிடங்கள் தடவி, குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சர்க்கரை கலந்தும் முகத்தில் தடவி கழுவலாம். சிறிது க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து தடவுங்கள். தோலில் சுருக்கங்கள் நீங்கும். நாட்டுச் சர்க்கரையை எலுமிச்சை சாறு கலந்து , தடவினால், அழுக்குகள், இறந்த செல்கள், நீங்கி சருமம் சுத்தமாகும்.

* ப்ரஷ் கொண்டு பல் துலக்கும்போது மிகவும் அழுத்தியோ அல்லது நீண்ட நேரமோ துலக்குவதால் பல்லிலுள்ள எனாமல் போய்விடும்.

உதட்டின் வறட்சியைப் போக்கும் வழிகள்:

உதடுகள் வறட்சியாவதற்கு கால நிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. இவை உதடுகளில் உள்ள ஈரப் பசையைப் போக்குவதுடன் உதடுகளை மென்மையிழக்கச் செய்து கருமையாக மாற்றுகின்றன.காபி, டீ போன்றவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிரவைத்துக் குடித்தால், உதடுகளுக்கு மிகவும் நல்லது. உதடுகள் எப்போதும் மென்மையாகவும் அழகாகவும் இருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* லிப் பாம் உபயோகிப்பதற்கு பதிலாக தேனை உபயோகிக்கலாம். தேனில் சருமத்தில் ஈரப் பசையைத் தக்கவைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊறவைத்திருந்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து தினமும் செய்து வந்தால், உதட்டின் ஈரப்பதம் குறையாமல் அப்படியே இருக்கும்.

* ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாகக் கலந்து தினமும் இரவில் படுக்கும்போது உதடுகளுக்கு தடவி வந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* வெள்ளரிக்காய்த் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப் பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

* மில்க் க்ரீம் உதடுகளை ஈரப் பதத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும். அதற்கு மில்க் க்ரீமை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக