செவ்வாய், 31 மார்ச், 2015

தினமும் பிராணயாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!


தினமும் பிராணயாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
 

யோகா என்பது இந்தியாவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கலையாகும். அது மனிதனின் மனது, உடல் மற்றும் ஆத்மாவை ஊக்குவிக்கும் என்று உலகம் முழுவதும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல விதமான வியாதிகளை தடுத்து, அவைகளை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது யோகா. அதே நேரம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா உதவும். பிராணயாமா என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும். இதுப்போன்று சுவாரஸ்யமானவை: உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க… வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிராணயாமா உங்களுக்கு தருகிறது. இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும். வேறு சில: நல்ல சிக்கென்ற இடை மற்றும் தொடை வேண்டுமா? அப்ப இந்த யோகாக்களை செய்யுங்க… பிராணயாமா செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிராணயாமாவால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட

வேண்டும். அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிராணயாமாவை முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. நுரையீரல் செயல்பாடு பிராணயாமாவால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணயாமா என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். எடை குறைப்பு பிராணயாமாவால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணயாமா உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிராணயாமாவை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிராணயாமா பயிற்சி. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிராணயாமா. மன அழுத்தத்திற்கான சிகிச்சை பிராணயாமாவால் கிடைக்கும் உடல் நல பயன்கள், மனதை திடமாக வைப்பதிலும் நீள்கிறது. தினமும் பிராணயாமா பயிற்சியை மேற்கொண்டால் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும். ஒரு நல்ல யோகா ஆசிரியிடம் இந்த பயிற்சியை கற்ற பிறகு, இதனை தினசரி செய்திடுங்கள். சுவாச குழாய்களை தெளிவாக்குங்கள் உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிராணயாமாவால் கிடைக்கும் உடல் நல பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகளை முயற்சி செய்து பார்த்து வெறுத்து போயிருப்பீர்கள். அப்படியானால் நீங்கள் பிராணயாமா பயிற்சியை தொடங்கும் நேரம் இது. பிராணயாமாவால் கிடைக்கும் முக்கியமான உடல் நல பயன்களில் இதுவும் ஒன்று. செரிமான கோளாறுகளை குணப்படுத்தும் நம் உடல் நலம் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஒழுங்கற்ற உணவு பழக்கமே. பிராணயாமா மற்றும் இன்னும் பல ஆசனங்களின் மூலமாக உங்கள் செரிமான பிரச்சனைகளை போக்க யோகா உதவுகிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், சீரான முறையில் பிராணயாமா பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதய குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனுலோம் விலோம் மற்றும் பாஸ்ட்ரிகா போன்ற பிராணயாமம் வழிமுறைகளின் மூலமாக உங்கள் உடலில் உள்ள இதய குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளளவையும் அதிகரிக்கும். மன ஒருமித்தலை மேம்படுத்தும் மன ஒருமித்தல் சக்தியை மேம்படுத்த பிராணயாமா ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது. இது உங்கள் அறிவு கூர்மையை மேம்படுத்த உதவும். மன ஒருமித்தலை மேம்படுத்துவதும் கூட பிராணயாமாவால் கிடைக்கும் ஒரு முக்கிய உடல் நல பயனாகும். சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடும் பிராணயாமா பயிற்சியால் கிடைக்கும் உடல் நல பயன்களில் சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடுவதும் முக்கியமான ஒரு பயனாகும். சைனஸ் பிரச்சனையை தவிர்க்க அல்லது சிகிச்சை அளிக்க பாஸ்ட்ரிகா என்ற பிராணயாமா வழிமுறையை பயிற்சி செய்யுங்கள். அதனை முயற்சி செய்து உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்.

Copy :http://senthilvayal.com/
https://suzhimunai.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக