செவ்வாய், 31 மார்ச், 2015

சாபனை விபரங்கள்

சாபனை விபரங்கள்

ஒருவர் பலவித சூழ்நிலையில் வம்சா வழியாக துன்பப்பட்டுக் கொண்டு இருப்பின் அவர் பிரேதசாபம், தேவதோஷம், ஸர்ப்பதோஷம், பித்ருதோஷம், அபிஷhர தோஷம், திருஷ;டி தோஷம் போன்ற சாபனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவரும், இதை அவரது ஜனன ஜாதக கிரஹ நிலை கொண்டு கண்டிப்பாக அறியலாம்.


1. பிரேத சாபம் : பிரேத சாபனை என்பது ஒருவரது குடும்பத்தில் இறப்பு நேரும் போது இறப்பு நடந்த இடத்தை சுற்றி சுமார் 88 அடி தீட்டு ஏற்படுகின்றது. இதை சிலர் பொருட்படுத்தாமல் உணவு அருந்துதல், பூஜை செய்தல், தாம்பத்ய தொடர்பு கொள்ளுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உண்டாவதாகும். மேலும் பிணத்தை வைத்துக் கொண்டு முறை செய்வதற்காக சண்டை போட்டுக்கொள்வது, பாகம் பிரிப்பது கடன் கொடுத்தோர் கடனை திருப்பி செலுத்த சொல்லுதல் இதன் மூலமும் இந்த சாபனை தொடரும்.
விளைவு : தீராத நோய்கள் ஏற்படும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், மனதில் நிம்மதியே இருக்காது, எந்த வித காரியத்தையும் சுலபமாக முடிக்க முடியாது, மணவாழ்க்கையில் வெறுப்பு, பிரிவு ஏற்படும் புத்திரசோகம் கொடுக்கும், தேவையற்ற பொருள்நஷ;டம் கொடுக்கும், புத்தி ஒரு சமயம் போல் மறுசமயம் இருக்காது.


2. தேவதோஷம் : தேவதோஷம் என்பது வீட்டில் பரம்பரை பரம்பரையாக பூஜை படங்கள் அல்லது எந்திரங்கள் அல்லது விக்கிரஹங்கள் இவற்றை பூஜித்து விட்டு பிறகு இவைகளை பூஜை செய்யாமல் அலட்சியப்படுத்துவதால் வருவது.


விளைவு : எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்காது, செலவு, உற்றார் உறவினர் மூலம் செலவு, வம்பு, வழக்கு, பிரயாணத்தால் செலவு, மருத்துவத்தால் செலவு, உறவுகள் பகையாக மாறும், பக்கத்து வீட்டுக்காரரால் சதா பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். தாம்பத்தியத்தில் வெறுப்பு ஏற்படும்.


3. ஸர்ப்பதோஷம், நாகதோஷம் (பெண் சாபனை) : ஸர்ப்பதோஷம் என்பது பெண்களுக்கு இழைத்த அநீதியால் வருவது.


கன்னிப்பெண்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை மணப்பது. நண்பனது மனைவியை நிர்பந்தத்தால் பாழ் செய்வது. அதிகாரத்தால் பெண்ணை பணிய வைப்பது. மணமான பெண், விதவைபெண், வாழாமல் வீட்டில் இருக்கும் பெண் இந்த பெண்களிடம் நன்றாக வாழவைப்பேன் என்று உறுதி கூறி சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு நடுவீதியில் விட்டு விட்டு ஓடி விடுவது. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை துவம்சம் செய்வது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்பி விடும் பெண்ணை மோசம் செய்வது. ஒன்றும் அறியாத சிறுமிகளை கெடுப்பது. முதல் மனைவி மனது நோக இரண்டாவது மனைவியை கொண்டு வருவது.


விளைவு : மனைவி கள்ள தொடர்பு வைத்து பல வித அவமானத்துக்கு உள்ளாக்குவாள். மனைவியிடத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை ஏற்படும் வீட்டில் நுழையவே பிடிக்காது. பெண் குழந்தைகள் தன் இஷ;டத்திற்கு நடந்து அவமானத்துக்கு உள்ளாக்குவார்கள். தாய், சதோதரியிடத்தில் மனவேற்றுமை உண்டாகி கொண்டே இருக்கும். கணவன் மனைவியிடத்து அன்யோன்யம் இருக்காது அதே சமயத்தில் பிளவும்; இருக்காது. மணவாழ்க்கையால் சொந்தத்தில் மதிப்பும், மரியாதையும் குறையும், கணவன் மனைவிக்கு அடிக்கடி உடல் பாதிப்பு இருக்கும். தொழில் விஷயமாக கணவன் மனைவிக்கிடையே அபிப்ராய பேதங்கள் உருவாகும், தொழில் நிமித்தமாக கணவன் மனைவி பிரிவு ஏற்படும். தன் மனைவி, சுகத்துக்கு தானே வேறு ஆள் கொண்டு வரும் நிலை ஏற்படும். அண்ணன் மனைவி, தம்பி மனைவி, மாமியார் மருமகன், மருமகள் மாமனார் தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மனைவியிடத்தில் அனுதினமும் கோபம் தாபம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.


4. பித்ரு தோஷம் : பித்ரு தோஷம் என்பது வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் விடுவது.
நன்றாக வளர்த்து எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்து வாழ வைத்த பெற்றோர்களை வயதான காலத்தில் தவிக்க விடுவது, அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பது, தனக்கென்று உயர்தர உணவும் பெற்றோர்களுக்கு என்று தரம்; குறைந்த உணவும் கொடுத்து ஹிம்சைக்கு உள்ளாக்குவது, பெரியோர்களை அலட்சியப்படுத்தி பணியாட்களாக கருதுவது, தனது பெற்றோர்களை பெற்றோர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவது, இயற்கை பாதிப்பில் இருந்து பெற்றவர்களை காப்பாற்றாமல் விடுவது, இறந்த பெற்றோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பது, அவர்களது உடமைகளை அலட்சியப்படுத்தி விற்பது, கொடுமை தாங்காமல் பெரியோர்கள் தற்கொலை செய்து கொள்வது இந்த செயல்கள் பித்ருதோஷத்தை கொடுக்கும்.


விளைவு : அடிக்கடி புத்தி மாறாட்டம் ஏற்படும், தன் இனத்தை விட்டு வேறு இனத்தில் பிறர் வெறுக்கும்படி திருமணம் நடக்கும், தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெரியோர்களது ஆதரவு கிடைக்காது, அடிக்கடி பெரியோரிடத்து திட்டு வாங்கிகொண்டே இருக்கும், ஒரு சமயம் நன்றாக பேசும், மறுமுறை பேசாது, தானே பேசும் சிரிக்கும், தலையை நமிர்த்திக் கொண்டே நடக்கும், கர்வம் பிடிக்கும், தேவையில்லாமல் பொருள் நஷ;டம் புத்திரசோகம் ஏற்படும், தலையில் அடிப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை பகுதி சூடாக இருக்கும், டென்சன் வாழ்க்கை ஏற்படும், மனதை போட்டு குழப்பிக் கொண்டே வாழ வேண்டி வரும்.


5. அபிஷhர தோஷம் : அபிஷhர தோஷம் என்பது செய்வினை தோஷம் ஆகும். மாந்திரிகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை அழிவுக்கு கொண்டு செல்வது. தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடகாலம் பாதிக்கப்படுவர், யார் செய்தார்களோ அவர்கள் 98 வருடகால் பாதிக்கப்படுவர், இவர்களது வம்சா வழியும் முன்னேற்றம் அடையாது. ஆக யாரும் செய்வினை தோஷத்தில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம். பலர் கஷ;டப்படும் போது செய்வினை செய்துவிட்டார்களோ என்று அச்சப்படுவர் இது தேவையற்ற அச்சமே, செய்வினை ஏவலை வெகு சுலபமாக செய்துவிட முடியாது, ஊர் தெய்வ உத்திரவு, குல தெய்வ உத்திரவு, ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலைகள் இவற்றை அறிந்து தான் செய்வினை ஏவலில் ஈடுபடமுடியும்.


விளைவு : செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்பு கிடக்கும், உணவில் துர்நாற்றம் கிளம்பும், பசு மாடு இறக்கும், இரவில் கதவு தட்டப்படும், பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும், கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும், கற்கள் வீசப்படும், தீப விளக்கு எரியாது, இனம் புரியாத கொடூர நோய் உருவாகும், சேர்த்து வைத்த செல்வம் பாழாகும், மனநிம்மதி இருக்காது, பிழைக்க வழியின்றி மனம் பேதலிக்கும், தன்னிலை மறப்பார்கள், சிரிப்பார்கள், ஓடுவார்கள்.


6. திருஷ;டி தோஷம்; திருஷ;டி தோஷம்; என்பது தனது ஆசை நிறைவேறாமல் எவர் ஒருவர் இறக்கின்றாரோ அவர் ஆன்மா சாந்தி அடையாமல் தனது உறவினர்களையோ அல்லது அவரது கிரஹ நிலைகள் ஒட்டியவரையோ பற்றிக் கொள்வது


விளைவு : நல்ல ஆசைகளை கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஆவலில் இருப்பவர்கள் திடீரென்று இறக்க நேரிடும் போது ஆன்மா சாந்தி அடையாமல் அந்த ஆசையை உயிருடன் இருக்கும் ஒருவர் மூலம் நிறைவேற்றி கொள்வார்கள். இதன் விளைவாக சிறிய வயதாக இருப்பவர்கள் பெரிய, பெரிய விசயங்களை சொல்வார்கள், எந்த கேள்வி கேட்டாலும் ஏற்கனவே பார்த்தது போல் சொல்வார்கள், நாம் அவர்களை பார்த்து வியப்பில் இருப்போம். இந்த நிலை அந்த சிறுவர்களிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் இருக்கும் பிறகு மறைந்து விடும்.



கெட்ட ஆசைகள் உள்ளவர்களின் ஆன்மா சாந்தியடையாமல் மற்றவர்களை பிடித்துக் கொண்டால் பல தொல்லைகளை கொடுத்து விடுவார்கள். இதையே பேய்பிடித்தல் என்று சொல்வார்கள். இந்நிலை உள்ளவர்கள் படும் துன்பம் பெரும் துன்பமாக இருக்கும் தானே சிரித்தல், விழிகளை உருட்டுதல், உயிருடன் விலங்குகளை கடித்து இரத்தத்தை குடித்தல், ஓடுதல், பழையவர்களின் பெயரை சொல்லி கூப்பிட்டு திட்டுதல், அடித்தல் போன்ற வெறியான செயல்களில் ஈடுபடுவார்கள்.
https://suzhimunai.wordpress.com/

கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்


கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்- “யோக வேதம் ” புத்தகத்தில் இருந்து

சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள். மனதின் கழிவுகளை யோக சாதனையின் மூலம் நீக்கும் முயற்சியில் ஈடுபடும் யோகிகளுக்கு அந்த சாதனைக்கு ஒத்துழைக்கும்படியான உடலைப் பெறுவதும் அவசியமாகிறது. எனவே உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.

அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை நான் உனக்குக் கூறுகிறேன். இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர். இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி 5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன என்பதை நினைவில் கொள்.

எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும். காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பாஷhண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒளஷதங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும். இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒளஷத முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை. எனவே அந்நிலையை அடைந்த சித்;தபுருஷர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது. ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.

எனவே அந்நிலையினை நீ அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும். இனி நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப் பற்றித் தெளிவாகக் கூறுகின்றேன். முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் கூறுகின்றேன். இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.

தந்த சுத்தி :

வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும். இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும். இதுவே தந்தாதி சூரணம் எனப்படும். தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும். பற்களில் வசீகரம் உண்டாகும். முகவசீகரம் ஏற்படும். அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.

தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும். பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும். அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும். இரத்தக்கசிவு கூட உண்டாகும். இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும். எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும். இனி அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் கூறுகின்றேன். இதை பயிற்சி செய்யும்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

நேத்திர சுத்தி:

முகம் முழுவதும் மூழ்கும் அளவிலான ஒரு மண்பாண்டத்தை வாய் அகன்றதாக எடுத்துக் கொள். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அந்தப் பாண்டம் முழுவதும் நல்ல சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்துவிடு. குhலையில் எழுந்த தந்நத சுத்தி செய்வதற்கு முன்பாக அந்த நீரில் 5 பன்னீர்ப்பூக்கள் அல்லது 5 நந்தியாவட்டம் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும். தந்த சுத்தி செய்து முடித்தபின்பு அந்த மண்பாண்டத்தில் உள்ள குளிர்ந்த நீhலி முகத்தை நன்கு அமிழ்த்திக் கொண்டு கண்களை நன்கு விரியத் திறந்து கண்விழியினை வலமிருந்து இடமாக 5 முறையும், இடமிருந்து வலமாக 5 முறையும் சுழற்றி பின் 5 முறை இமைகளை மூடி மூடித் திறந்தும் அதன்பின் சற்றுநேரம் கண்களை அசைக்காமல் திறந்தபடியும் வைத்திருக்க வேண்டும். இவ்;வாறு செய்யும்போது சுவாசத்தை நிறுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் முகத்தை வெளியில் எடுத்தும் செய்யலாம். செய்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இது மிகவும் அரிய பயிற்சியாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் உண்டாகும் அழுக்குகள், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களின் அழற்சி முதலியவை நீங்கி கண்களின் உட்புறம் உள்ள மிகவும் நுண்ணிய நரம்புகள் குளிர்ச்சியடைந்து கண்கள் மிகவும் பிரகாசமடைவதுடன் குளிர்ந்து காணப்படும்.

இதைச் செய்வதால் தீவிரமாக அப்பியாசம் செய்யும் போது கண்களில் ஏற்படும் அதிக எரிச்சல், இமைகள் துடித்தல், கண் இமை ஓரங்களில் ஏற்படும் அதிக வலி ஆகிய உபாதைகள் நீங்கும். மேலும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் கண் மறைவு நீங்கும். இந்த முறையில் பன்னீர் மற்றும் நந்தியாவட்டம் பூக்கள் கிடைக்காவிட்டால் வெறும் தூய்மையான நீரை மட்டும் பயன்படுத்தலாம். இந்த நித்திய சுத்தி முறையில் கூறப்படும் நேத்திர சுத்தி முறையினை சாதாரணமாக சம்சார வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யோக சாதனையை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் இதைச் செய்தாக வேண்டும். கிரியா எனும் யோக விஞ்ஞானத்தின் பயிற்சிகளை மேற்கொள்ளும் நீ இந்த நித்திய சுத்தி முறைகளை தெளிவாக அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எவ்வித மறைப்பும் இன்றி வெளிப்படையாகக் கூறுகிறேன். கவனமுடன் கேட்டு முறையாகக் கடைப்பிடிப்பாயாக.
இனி அடுத்ததாக பல பெரிய யோகிகள் கூட அறிந்திராத அதே சமயம் மிகவும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கப சுத்தி முறையானது கூறப்படுகிறது. இந்த முறையினை நம்முடைய முன்னோர்களான கிரியா யோக மஹாகுருமார்கள் அனைவரும் பின்பற்றியது மட்டுமின்றி வலியுறுத்தியும் கூறியுள்ளனர். ஆதை உனக்குக் கூறுகின்றேன்.

கப சுத்தி:

மூலிகை கைகளில் பல இருந்தாலும் யோக நிலைக்கு உதவும் ஈர்ப்பு சக்தியுள்ள மூலிகைகள் இவ்வுலகில் உண்டு. இந்த விதமான மூலிகைகளில் தாதுக்களின் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஐம்பூத அணுவின் ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அவ்வாறான மூலிகைகளையே காயகற்ப மூலிகைகள் என்று கூறுவர். இவ்வாறான காயகற்ப மூலிகைகளுள் முதன்மையான இடத்தைப் பெறுவது கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகையாகும். இந்த மூலிகையைப் பயன்படுத்தாத யோகிகளே இல்;லை என்று கூறலாம். அவ்வளவு அரிய மூலிகையான கரிசலாங்கண்ணி மூலிகையே கிரியா யோக அப்பியாசத்தின் போது தைல முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் கப சுத்தி முறைக்கும் இந்த மூலிகையே பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி மூலிகையை வேண்டிய அளவு பிடுங்கி வந்து நன்கு தண்ணீரில் கழுவி உரலில் போட்டு இடித்து சாறுபிழிந்து வைத்துக்கொள். அந்தச் சாற்றின் அளவிற்கு சமஅளவு சுத்தமான பசு நெய்யினை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடி கனத்த சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் பதமாகக் காய்ச்சவும். நன்கு காய்ந்து நெய் சிவந்து புகையும் நிலையில் படிகாரம் என்னும் சீனிக்காரத்தைப் பொடி செய்து சிறிதணவு அதில்போட்டு சற்றுநேரம் கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்தப் பாண்டத்தின் வாய்க்கு துணியால் வேடுகட்டி வைத்துக் கொள்ளவும். இது அமிர்தத்திற்கு ஒப்பானதாகும்.

தினமும் காலையில் தந்த சுத்தியை முடித்த பின்பு இந்த கரிசாலை நெய்யை வலதுகைப் பெருவிரலில் தொட்டு வாயினுள் உள்நாக்கின் பின்புறமுள்ள மேல்நோக்கி சுவாசமானது செல்லும் துவாரத்தின் வாயில் நன்கு தடவி விடவும். பின்பு யாரிடமும் பேசாமல் எதுவும் உண்ணாமல் (48 நிமிடங்கள்) இரண்டு நாழிகை நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கவும். இவ்வாறு நெய்யினை மூன்று முறை நெய்யினைத் தடவிக் கொண்டு இரண்டு நாழிகை இருக்கும்போது மனிதனின் சுவாசத்தை தடை செய்து மரணத்தை ஏற்படுத்தும் கபம் என்னும் கோழை என்றும் கூறப்படும் ஊர்த்துவ நாடி எனும் மேல் முகமான மிக மெல்லிய, நுண்ணிய ஜீவனாகிய உயிர் எனும் ஜீவ அணுவின் சுழற்சிக்கு சுவாசமானது செல்லும் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் கோழையானது இந்த மூலிகை நெய்யின் ஆற்றலால் மிக மெதுவாகக் கரைந்து கரைந்து வாய்க்குள் வர ஆரம்பிக்கும். இதை வெளியில் துப்பிவிட வேண்டும். இந்தக் கோழையானது நச்சுத் தன்மை உடையது.

மனிதன் பிறக்கும்போது உருவான இந்தக் கபமானது இறக்கும் வரையில் தானாக வருவதில்லை அதனால் தான் நாசியின் மேல்புறம் வழியாக நெற்றியின் உட்புறத்தில் உள்ள சுவாச நரம்புகளின் வழியாக சுவாசமானது பிரிந்து ஜீவ அணுவிற்கு சுற்றிக் கொண்டு செல்கிறது. இவ்வாறின்றி சுவாசமானது ஒரே நேர்க்கோட்டில் உடம்பின் மையப்பகுதியில் மேல்நோக்கி இயங்க வேண்டும். இதற்காக சுவாசத்தை இயற்கைக்கு மாறாக மேல்நோக்கி செலுத்தக் கூடாது. அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிய வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிக வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு வருவதை சிலர் அமிர்தம் என்று கூறிக்கொண்டு உட்கொண்டு விடுவார்கள்.
மனித உடலின் கழிவாகிய கபம் என்னும் கோழையானது எங்காவது அமிர்தமாகுமோ? இவ்வாறு வாசியோகம்; என்னும் பயற்சியைச் செய்யும் சில யோகிகள் தெரியாமல் கோழையை உட்கொள்வதால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதுடன் வாய்நாற்றம், வயிற்றுவலி போன்ற நோய்களும் உண்டாகும். எனவே இந்த உண்மையான கபசுத்தி முறையினை முறையாக தவறின்றி தினமும் பயிற்சி காலத்தில் நீ கடைப்பிடித்து வரும்போது ஊர்த்துவ நாடியானது சிறிது சிறிதாக அடைப்பு நீங்கி சுத்தமாகும். இவ்வாறு சுத்தமாவதால் சுவாசமானது தானாக மேல்நோக்கும். இதனால் ஜீவ அணுவின் சுழற்சி அதிகமாகி வான் அமிர்தம் எனும் அணுமின் காந்த ஜீவ சக்தியை அதிகமாக உள் ஈர்க்கும். இதுவே உண்மையான வாசியோகமாகும். எனவே இந்த கபசுத்தி முறையினைத் தவறாமல் தினமும் செய்வாயாக.

குடல் சுத்தி:

யோகப் பயிற்சியாயினும் சரி, சாதாரண வாழ்க்கை யாயினும் சரி வயிறு சுத்தமாக இருப்பது அவசியம். வயிற்றில் உள்ள சீரண மண்டலங்களான குடல்களை சுத்தம் செய்யும் முறைக்கு குடல்சுத்தி என்றுபெயர், இது மிகவும் அவசியமானதாகும். குடல் சுத்தமாகி அன்றாடம் உள்ள கழிவுகளை நீக்குவதன் மூலமாக யோக சாதனை சித்தியானது மட்டுமல்லாமல் பல நோய்களும் நீங்கும். இவ்வாறான குடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சுத்தமான தண்ணீர் 2 படி எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்து அதில் சிறிதளவு சீரகத்தைப் போட்டு நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.

அதிகாலையில் எழுந்து மூடியைத் திறந்து பார்க்க அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த நீரை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். காலையில் தந்த சுத்தி செய்தவுடன் இந்த நீரை சிறிது சிறிதாக உட்கொண்டு வயிற்றை எக்கி மறுபடியும் விட்டு உள்புறம் எக்கி மறுபடியும் விடவும். இவ்வாறு 8 முறை செய், இவ்வாறு செய்வதால் வயிற்றிலுள்ள மலங்கள் அலசப்பட்டு மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மலம் கழித்துவிட்டு வந்து மறுபடியும் தண்ணீர் அருந்திவிட்டு இவ்வாறு செய். மறுபடியும் உள்ளே தங்கியுள்ள மலங்கள் வெளியேறும். இவ்;வாறு 4 அல்லது 5 முறைகள் செய்யவும். ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகவும் சலிப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக வியத்தகு மாற்றங்கள் உண்டாகும்.
இதனால் பசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல், அதனால் உருவாகும் தலைவலி, தோல் நோய்கள், யோக சாதனையால் வயிற்றில் உண்டாகும் அதி உஷ;ணம், எரிச்சல், வயிற்றில் வாயு சுழற்சியால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். உடல் பளபளப்பும் குளிர்ச்சியும் உண்டாகும். மிகவும் அபூர்வமான இந்த முறையினைப் பின்பற்றும் சாதாரணமாக யோக சாதனைகள் செய்யாத மனிதன் கூட 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வான். இந்த முறையினை முறையாகச் செய்யாமல் சிலர் காலையில் எழுந்தவுடன் கொதிக்க வைக்காத நீரை அருந்துவார்கள். சிலர் அன்னக்கஞ்சியை மோர் சேர்த்து உட்கொள்வார்கள். இதனால் உடலில் உஷ;ணம் குறைந்தாலும் உடலில் கபமானது அதிகரிக்கும்.

இதனால் தலையில் நீரேற்றம், தலைக்கனம், அதிக வியர்வை, சீதளநோய்கள், மூட்டுவலி, பசிமந்தம் ஆகிய நோய்கள் உண்டாகும். எனவே நான் மேலே கூறியுள்ள முறைப்படி செய்வதுதான் உண்மையான குடல் சுத்தி முறையாகும். தந்த சுத்தி செய்தவுடன் நேத்திர சுத்தி செய்து பின்பு குடல் சுத்தி செய். அதன்பின்பு கப சுத்தி செய்வது நன்று. ஏனெனில் மல உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். எனவே குடல் சுத்தி முறையினை கிரியா யோக சாதனை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முறையாகச் செய். ஏனெனில் யோக சாதனையை மட்டும் போதித்து விட்டு அதற்கு ஏற்ப உடலின் தன்மைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வழியினைக் கூறாமல், கூறத்தெரியாமல் பலர் விட்டுவிடுவதால் தான் அதை அப்பியாசம் செய்பவர்கள் எவ்வளவுதான் கடினமாகவும், விடாமலும் பயிற்சி செய்தாலும் உயர்நிலையினை அடையாமல் அடைய முடியாமல் ஏமாந்து விடுகிறார்கள்.
மேலும் பயிற்சியின் விளைவால் உடலில் ஏற்படும் அதிக உஷ;ணம், வாயுவின் சுழற்சி ஆகியவைகளைத் தாங்க முடியாமல் அவர்கள் பல உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவேதான் நான் உனக்கு நித்திய சுத்தி முறைகளைத் தெளிவாகக் கூறினேன். இனி உடல் சுத்தி முறையைக் கூறுகின்றேன். உடலில் உள்ள கழிவுகள் ஒவ்வொரு உரோமக் கால்கள் வழியாகவும் வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கழிவுகளை அன்றாடம் தூய்மையாக நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இவ்விடத்தில் உன் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். பல பெரும் யோகிகள் பல ஆண்டுகள் குளிக்காமல் இருக்கிறார்களே என்று, உண்மைதான், அவர்கள் தங்கள் உடலை வெகுகாலங்;கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு காயசித்தி செய்து கொண்டவர்களாவார்கள்.
ஆவ்வாறு காயசித்தி பெறுவதற்காக பல உயர்வான தெய்வீக சக்தியுள்ள மூலிகைகளையும், பாஷhணங்களையும், உலோகங்களையும் இன்னும் உயர்வான பல தாதுப் பொருட்களை யெல்லாம் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி மிகவும் அபூர்வமான கல்ப ஒளஷதங்களைச் செய்து அதை மிகவும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உட்கொண்டு உடலளவில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து உடலை சித்தி செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.
இவ்வாறான காயசித்தி முறையின் அபூர்வமான ஆற்றலால் தான் அவ்வாறான மாபெரும் யோகிகளின் மலம், சிறுநீர், வியர்வை, எச்சில், உடல் அழுக்குகள் போன்றவைகள் கூட அவர்கள் உட்கொண்ட பல அரிய கல்ப ஒளஷதங்களின் சக்தியைப் பெற்றுள்ளதால் அவைகள் பட்ட உலோகங்கள் எல்லாம் களிம்புகள் நீங்கி அவர்களின் உடலைப் போலவே தங்கமாகவே மாறுகின்றன. இவ்வாறான நிலையை அடைந்த யோகிகளைத் தவிர ஆரம்ப நிலையில் காயசித்தியினைக் கடைப்பிடிக்கும் முன்பாக அடிப்படையான யோக சாதனைகளைச் செய்துவரும் யோகியானவர் கண்டிப்பான முறையில் கீழ்க்காணும் முறைப்படி யோகியருக்கு உண்டான உடல் சுத்தியினைச் செய்தாக வேண்டும். இனி மிகவும் அருமையான உடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன்.
உடல் சுத்தி:
உடல் சித்தி முறைக்குத் தேவையான பொருள்களைக் கூறுகின்றேன். பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வங்காளப் பச்சை, வசம்பு ஆகிய 4 பொருள்களையும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். இந்த நான்கு பொருள்களின் மொத்த எடைக்கு 10 பங்கு குட்டி விளா இலையையும் அதே அளவு சீயக்காய் காயையும் எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின்பு நன்கு இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும் (மிஷpனிலும் அரைக்கலாம்). காலையில் எழுந்தவுடன் இந்த சூரணத்தில் சிறிதளவு எடு;த்து ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். தந்த சுத்தி, நேத்திர சுத்தி, குடல் சுத்தி, கப சுத்தி ஆகிய நான்கையும் முடித்தவுடன் இளம் சுடுநீரில் இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உன் உடலின் மயிர்க்கால்களில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம், உடல் இடுக்குகளின் உப்புப் படிதல், தோலின் வறட்சி, தோல் நோய்கள் நீக்குவதுடன் தோல் பளபளப்போடு வாசனையும் இருக்கும்.

இவ்வாறு முறையாக நித்ய சுத்தியை ஒரு யோகியானவர் அவருடைய யோக சாதனை செய்துவரும் காலங்களில் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எவ்விதமான உடல் உபாதைகளும் இன்றி அவருடைய யோக சாதனையானது நடைபெறும். எனவே நீ இந்த நித்திய சுத்தி முறைகளை முறையாகவும், விடாமலும் கடைப்பிடிப்பாயாக. அப்போது தான் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இவ்வாறு நித்திய சுத்தி முறைகளை முறையாகச் செய்து வந்தாலும் உன்னுடைய தீவிரமான பயிற்சியின் விளைவாக உதிரமானது விரைவாக ஓடுவதன் காரணமாகவும், உடலின் நீர்த் தன்மையானது வியர்வையாக அதிகம் வெளியேறுவதன் காhரணமாகவும் உடலில் அதிக உஷ;ணம் ஏற்பட்டு உடல் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு இணைப்புகளிலும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ள ஜவ்வு மண்டலங்கள் வறட்சியடைந்து வலி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு ஏற்படாமல் இருக்க மாதத்தில் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை ‘பட்சசுத்தி’ எனும் முறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதையும் தெளிவாகக் கூறுகிறேன்.

பட்ச சுத்தி:
இந்த பட்ச சுத்தி முறைக்கு உண்டான பொருள்களை முதலில் கூறுகின்றேன். மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால்பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுதுபோல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 ஜாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உஷ;ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உஷ;ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.

இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோகசாதனையை செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை நீ உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்படு. ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள்.

கிரியா யோகத்தின் 16 நிலைகள்:

1. பார்வையை நிலைப்படுத்தல்
2. மனதை நிலைப்படுத்தல்
3. சுவாசத்தை நிலைப்படுத்தல்
4. உடல் இயக்கங்களை நிலைப்படுத்தல்
5. பிரபஞ்ச ஆற்றலை உணர்தல்
6. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அறிதல்
7. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அதிகப்படுத்தல்
8. உடலின் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்தல்
9. பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி நிறுத்தல்
10. உடல்சித்தி எனும் காயசித்தி செய்தல்
11. உயிராகிய ஜீவ அணுவை உடலில் இருந்து பிரித்து அறிதல்
12. அங்கப் பிரவேச சித்தியடைதல்
13. ஆகாயப் பிரவேச சித்தியடைதல்
14. உடல் அணுக்களில் அணு, மின், காந்த சக்தியை உயர்த்தி உடலின் பெண்மைத் தன்மையை நீக்குதல்
15. உடலை ஒளி உடலாக மாற்றி தூய உடலாக்குதல்
16. பிரபஞ்ச சக்தியுடன் இரண்டறக் கலந்து அனைத்தையும் அறிந்து கொண்டு சமாதி நிலையில் இருத்தல். இதுவே சாயுச்ய நிலையாகும்
https://suzhimunai.wordpress.com/

ஹோம மந்திரங்களும், ஹோமத்தின் பலன்களும் …



ஹோம மந்திரங்களும், ஹோமத்தின் பலன்களும் …



1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ – ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ – கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் – அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற


46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
ஹரிஹர மந்த்ரம்
” ஓம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய ”
( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

https://suzhimunai.wordpress.com/

மூன்றாவது கண் !!!



மூன்றாவது கண் !!!

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும் புருவங்களின் இடைநடுவே சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர்த் துவாரத்திற்கும் மலத் துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊறும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகந்தண்டு எலும்புக்குள் உள்ள மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் விவேகத்திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.

குண்டலினி சக்தியின் பிரதிபலிப்பு நம் தோற்றத்தில் பார்ப்பதென்றால், கண்ணுக்கு நேரே நான்கடி தூரத்தில் ஒரு நாக்கு பூச்சி அளவில் சிறு வளைவுகளும் சிறு கால்களைப் போன்ற கிளைகளும் 3 1/2 முதல் 4 அங்குல நீளத்தில் ஒன்று அல்லது இரண்டு தெரியவரும். இதில் சில பிரகாச அணுக்கள் கசகசா அளவில் இணைந்திருப்பதையும் பார்க்கலாம். இவை ஒரே நிலையாய் நிலைத்து நிற்கா, மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தோன்றுவதும், பின் மறைவதும் இதன் தொழில். பக்தர்கள் யாவரும் இதைப்பார்க்கலாம்.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு அறிந்த ஞானாசி¡¢யரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு விந்தும், தன் ஞாபகமும் கலந்தால் தான் முடிகிறது. இந்தக் கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி (பிரணாயாமம்) என்ற மூச்சுப் பயிற்சியாலும் மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது. நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப்பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணரமுடியும். பின் அதை, அனுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகின்றோமென்று அவரவர்களுக்குத் தெரியாமலேயே சலாமென்றும், வந்தனமென்றும், நமஸ்காரமென்றும், கும்பிடுகின்றேனென்றும், சொல்லியும்; தங்கள் தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும் தங்கள் தங்கள் கையையும், சைகையையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத்தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமுங் கோபமும் பிறப்பதும் அங்கிருந்தேயாகும். மிகுந்த கோபம் ஏற்படும்போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டுமென்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகியே தீருவான் என்பது திண்ணம். ஆகையால்தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

மனிதன் ஆண்டவனை அறியவோ ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும். இப்படி அனேக காரியங்கள் தானே உண்டாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பெரிய பெரிய சிற்பிகள் சித்தரிக்கும் சிலைகளுக்குங்கூட அச்சிலைகளின் மீது அன்பும், விசுவாசமும், பயபக்தியும் மக்களிடத்தில் கூட்டுவதற்கு வேண்டி அச்சிலைக்கு நெற்றிக்கண் திறப்பது என்று ஒரு சடங்கை பெரிய விசேடமாகக் கொண்டாடுவதுண்டு. இதைச் செய்ய அந்தச் சிலையை உருவாக்கிய சிற்பியை விட்டு வேறொரு ஆச்சாரியாரைக் கூப்பிடுவார்கள். அவன் அச்சிலைக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகப் பாவனை காட்டுங் காலத்தில் வருடக்கணக்கில் சித்தரித்த சிற்பியும் அச்சிலையை வணங்க ஆரம்பிக்கிறான். அதுபோன்று எப்படிப்பட்ட அறிஞனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு குரு அவசியம். ஆகவே நெற்றிக்கண் உணர்வு உண்டாக்கக் குருவும், சிந்தனையும், வயதும் அவசியமாகும்.

உலகில் பலர் பலவிதமாகச் சொல்லுவார்கள். அனுபவமில்லாதவர்கள் சொற்களைக் கேட்பதைவிட, அனுபவமுடையவர்கள் சொற்களைக் கேட்பது உங்களுக்கு நலமாகும்.

நாயகன் செயல் நாயகன் செயலென்று நழுவவிடாமல், நல்லறிவாய் நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

அதுபோல் உலகத்தில் மிகுதியான குணங்கள் உள்ளன. அந்த குணங்களுக்குரியவர் பலராவர். அவர்களை நீங்கள் குறை சொல்லாமல் அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை மட்டும் கிரகித்துக்கொள்ளுங்கள்.

கடலில் உள்ள மீனானது கடல் உப்பில் சாராததுபோல் உலகத்திலுள்ள நல்லடியார்களாகிய நீங்கள், உலகத்திலுள்ளதீய செயல்களில் சாரவே மாட்டீர்கள்.

– குறிப்பு நான் கடவுள் புத்தகம்
https://suzhimunai.wordpress.com/

ஆல்ஃபா அலைகள் !!!


ஆல்ஃபா அலைகள் !!!


ஆழ்மன சக்திகள் சாத்தியம் என்பதையும், அவை கைகூடத் தடையாக இருக்கும் எந்த மனநிலைகளை நீக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். இனி அவை எப்படி சாத்தியப்படும் என்பதையும் பார்ப்போம்.

நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph – EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second –CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.

பீடா அலைகள் (Beta Waves) – பதினான்கிற்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே.

ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) – எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.

தீட்டா அலைகள் (Theta Waves) – நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.

டெல்டா அலைகள் (Delta Waves) – நான்கிற்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.

இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.

அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.

அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள் என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.

பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம்.
அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டத்திற்கு நம் உணர்வு நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.

இதை வைத்தே “தத்துவமஸி” (நீயே அது), அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ப்ரம்மம்), என்ற வேத வாக்கியங்கள் எழுந்திருக்க வேண்டும். Know Thyself (உன்னையே நீ அறிவாய்) என்று பல மதங்களில் பிரதான அறிவுரையாகக் கூறுவதும் உன்னை நீ முழுவதுமாக அறிய முடியும் போது எல்லாவற்றையும் முழுமையாக அறிய முடியும் என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ விஷயங்கள் ஆழ்மன அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் விஷயத்திலும் உண்மையாக இருப்பது தான் பேராச்சரியம்.

உதாரணத்திற்கு எறும்புகள் குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியைச் சொல்லலாம். ராணி எறும்பை எறும்புக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி எத்தனை தொலைதூரத்தில் வைத்தாலும் எறும்புகளின் கட்டுமானப்பணிகள் தடைபடாமல் கச்சிதமாக நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆனால் தொலைதூரத்தில் இருக்கும் அந்த ராணி எறும்பைக் கொன்று விட்டாலோ அந்த எறும்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன என்பதையும் அங்குமிங்கும் அலைபாய்கின்றன என்பதையும் ஆராய்ச்சியில் அறிய முடிந்தது. எவ்வளவு தொலைவானாலும் சரி ராணி எறும்பு உயிருடன் இருக்கும் வரை அதனிடமிருந்து எப்படியோ தேவையான கட்டளைகள் மற்ற எறும்புகளுக்குப் போய் சேர்கின்றன என்பது மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா? அப்படி செய்திகள் பரிமாற்றம் ஆவது ஆழ்மன அளவிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது.

நாம் முன்பு பார்த்த பல ஆழ்மன சாதனையாளர்களும் ஒருவித அரைமயக்க நிலைக்குச் செல்ல முடிந்த போது தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதைக் கண்டோம். மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன பிராந்தியத்திற்குள் நுழையும் போது தான், ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் சஞ்சரிக்கும் போது தான், எல்லோரையும் பிணைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தியைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு, எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாகவும் அதை ஆகாய ஆவணங்கள் என்றும் எட்கார் கேஸ் சொன்னதை எண்ணிப்பாருங்கள். அதைப் படிக்கும் கலையை அறிந்து கொண்டால் எந்தத் தகவலையும் மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று அவர் சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் சஞ்சரித்து ஆழ்மன சக்திகளை அடைய முதலடி எடுத்து வைப்போமா?
எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.
ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.
எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது.
https://suzhimunai.wordpress.com/

சித்தர்களின் சாகாக்கலை !!!







    சித்தர்களின் சாகாக்கலை !!!


    சாகாக்கால் ; வேகாத்தலை; போகாப்புனல்
    பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்துப் பாருங்கள்
    சாவே போ
    மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தால் சாவே போ என்றால் சாவு என்ற இறப்பு போய்விடும்.இவ்வளவு எளிமையாக இறப்பை போக வைக்க முடியுமா?
    அப்படியானால் ஏன் யாரும் இதற்கு முயற்சிக்கவில்லை என்ற கேள்வி
    உங்களுக்கு எழும் இல்லயா?
    முயற்சிக்காமலா இத்தனை சித்தர்கள் நம் நாட்டில் தோன்றியுள்ளார்கள்!
    அவர்கள் காட்டிய வழிகளை ரகசியமாக வாய்மொழியாக பல தலை முறையாக காப்பாற்றி வருகிறார்கள்.

    திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச் சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டிமறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி மதனகலி யாணதிரு வல்லி மாதுவரையெழுந்த பதினெட்டாங் கோட்டின்மேலு மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றிகரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே
    சாகாக்கால் செத்துப்போக வேண்டும்?
    வேகாக்கால் வெந்து போக வேண்டும்?
    போகாப்புனல் வற்றி போக வேண்டும்?
    (புனல் என்றால் தண்ணீர் என்று பொருள்)
    மேலே கண்ட இரண்டாவது படம் லிங்கோத்பவர் என்பது ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கருவறைக்குப் பின்னால் இருக்கும்.இது மிக ரகசியப் பொருள் விளக்கம் என்பதால் கருவறைக்குப் பின் வைக்கப்பட்டுள்ளது. அது சிவனின் திருமால் பன்றி வடிவமாக(வராக அவதாரம்)அடியையும் (கால்),பிரம்மா அன்னப் பட்சி வடிவில் முடியையும் (தலையையும்) தேடியதையும் விவரிக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.(அடி முடி தேடிய படலமாக புராணங்களில் வருணிக்கப்படுகிறது). அதில் ஜோதி வடிவமாகவும் பொருள் வடிவமாகவும் இறைவனான சிவன் (ஜீவன்) இருப்பதைக் காணலாம்.

    கால் என்பதை காற்று என்றும் ;மூக்கில் மேலும் கீழும் வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ,சிந்தைதனில் ஒத்து ஆடாது,ஓடாது நின்று போய்விட்டால் மரணமிலாப் பெருவாழ்வு’ என்று பொருள் கூறுவார்கள். அதையே அவ்வையார் ‘வாசி வாசி என்று வாசித்த சிவம் இன்று சிவா சிவா என சிந்தைதனில் நின்று’ என்று பாடினார் . சரிதான்.ஆனால் ‘வாசிக்குதிரையேறி (மூச்சு) ஞான வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது’.அதாவது குதிரையின் கடிவாளத்தைப் பற்றி குதிரையோட்ட வேண்டுமேயல்லாது குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது. குதிரையின் கடிவாளம் எது ?
    ‘காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்திட்டால் கூற்றை உதைத்துக் குதித்தாட மாட்டேனோ? ‘ என்றொரு சித்தர் கூத்தாடுகின்றார்.
    ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.
    அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

    ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
    360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.

    216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
    உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.

    18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,
    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.
    Thanks:http://www.machamuni.com/
    -https://suzhimunai.wordpress.com/

    Comment:

    போகாப்புனல்.:மனம் கீழ்நிலையில் உள்ள ஆண்.பெண் குறிக்கு போனால் ஜீவ நாசம் அதனால் மரனம் சம்பவிக்கும் இதுவே போகா புனல்.சாகா கால்.: நடு நாடியாகிய சூட்சும நாடியில் மேவ்நிலையில் சுழு முனையில் மனதையும் ஜீவசத்தையும் நிருத்தி அதை மட்டும் ஓடச்செய்து அந்தக்காலில் நிற்க்கும் செயலே சாகாக்கால்.வேகாத்தலை.: முறையாக தியானப்பயிற்ச்சி செய்பவர்களுக்கு சிரசில் ஜீவசத்து நிரம்பி அது அக்கினியாக இருக்கும்.தவசிக்கு அகத்தில் குழுமையாக .இருக்கும.அடுத்தவர் தொட்டுப்பார்த்தால் அக்கினியாக சுடும்.சிரசில் ஜீவசத்து அக்கினி ஒளியாக இருக்கும் இதுவே சித்தர்கள் சொன்ன வேகாத்தலை ரகசியம்.இச்சிரியேனின் அக அனுபவம்.பெரியோர்கள் தவரிரருந்தால் மண்ணிக்க.்

    ஒத்தக்காலில் நின்று தவம் செய்தார் என்பது.காலில் அல்ல.ஒரு மூக்கு சரத்தில்.சூரியகலையில் பயிற்ச்சி செய்பவர்.சூரியவம்சத்தவர்.சந்திர கலையில் பயிற்ச்சி செய்பவர்.சந்திரவம்சத்தவர்.சுழுமுனையில் பயிற்சிசெய்பவர சிவவம்ச சூனியர்கள் ஆவர்்

குதம்பை சித்தர் !!!


குதம்பை சித்தர் !!!


அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர்.

குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது.

இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார்.

ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி…இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார்.

அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை.

அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை.

அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்… தவம்… தவம்… எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான்.

குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

தியானச் செய்யுள்:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே

காலம்: குதம்பை முனிவர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.

படித்ததில் பிடித்தது

http://temple.dinamalar.com/